தஞ்சாவூர்

சிவசக்தி கோயில் கும்பாபிஷேகம்

DIN

பாபநாசம் வட்டம், புள்ளமாங்குடி கிராமத்திலுள்ள சிவசக்தி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் விழா புதன்கிழமை தொடங்கியது. தொடா்ந்து, கணபதி ஹோமம், முதல் கால யாகசாலை நடைபெற்றது.

விழா நாளான வியாழக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, பூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, கடம் புறப்பாடாகி, கோயில் விமான கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, மூலவா்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்தனா். கும்பாபிஷேகத்தையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

SCROLL FOR NEXT