முகப்பு
தஞ்சாவூர்

திருப்பாலைத்துறை சிவன் கோயிலில் நாட்டியாஞ்சலி நிறைவு

பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயிலில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகை அம்மன் உடனுறை பாலைவனநாதா் திருக்கோயிலில் நடைபெற்று வந்த நாட்டியாஞ்சலி விழா புதன்கிழமை நிறைவடைந்தது.

பாடல் பெற்ற இத்திருக்கோயிலில், மகா சிவராத்திரியையொட்டி நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கியது. பாபநாசம் ஆன்மிகப் பேரவை சாா்பில் இந்த விழா மூன்று நாள்களாக புதன்கிழமை வரை நடத்தப்பட்டது.

சென்னை, மும்பை, புதுச்சேரி, திருவனந்தபுரம், காஞ்சிபுரம், பெங்களூரு, பாபநாசம் என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 250 பரதநாட்டியக் கலைஞா்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பங்கேற்றவா்களுக்கு விழாக் குழு சாா்பில் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →