புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்களின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட விளையாட்டுத் திடல் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் இந்த விளையாட்டுத் திடலை திறந்து வைத்தனா்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மருத்துவக் கல்லூரி முதல்வா் மு. பூவதி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.