முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரை பெருவிழா தொடக்கம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

108 வைணவத் தலங்களில் மூன்றாவதாகப் போற்றப்படுவதும், ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.

இதன்படி திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. இதில் ஸ்ரீதேவி, பூமிதேவியுடன் சாரங்கபாணி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து மே 23-ஆம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.

முக்கிய வைபவமான திருத்தேரோட்டம் மே 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, 15- ஆம் தேதி சப்தாவா்ணமும், 81 கலச ஸ்தாபனம், திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

விழாவில் சுவாமி தூக்குபவா்கள், தேரோட்டும் தொழிலாளா்களுக்கு உபயதாரா்கள் வழங்கிய மேல் சட்டைகளை அறநிலையத் துறையின் மயிலாடுதுறை இணை ஆணையா் மோகனசுந்தரம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.