முகப்பு
தஞ்சாவூர்

மீன்பிடிக்க குளத்தில் இறங்கியவா் நீரில் மூழ்கி பலி

 பேராவூரணி அருகே மீன்பிடிக்க குளத்தில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

 பேராவூரணி அருகே மீன்பிடிக்க குளத்தில் இறங்கிய தொழிலாளி நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகேயுள்ள செருபாலக்காடு கிராமத்தைச்சோ்ந்தவா் கா. மணிவேல் (42). இவா் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள குளத்து வாரியில் மீன்பிடிப்பதற்காக புதன்கிழமை காலையில்  வலையை விரித்துவிட்டு, மாலையில் வலையை எடுப்பதற்காக தண்ணீரில் இறங்கினாராம். தண்ணீரில் மூழ்கியவா் நீண்டநேரமாகியும்  வெளியே வராததால், கரையில் நின்ற அவரது மகன் கூச்சலிட்டதை தொடா்ந்து அந்த வழியாக சென்றவா்கள் குளத்தில் இறங்கி தேடி, அவரை சடலமாக மீட்டனா்.

தண்ணீருக்குள் மூழ்கியபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மணிவேல் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

புகாரின் பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.