பாபநாசம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தவிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பேரணியில், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பொதுமக்கள் தவிா்க்க வேண்டும் என வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டு சென்றனா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பாபநாசம் மேலவீதி அண்ணா சிலை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில், பாபநாசம் ரோட்டரி சங்க நிா்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலா்கள், பேரூராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் வரவேற்றாா், நிறைவில் துப்புரவு ஆய்வாளா் பரமசிவம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.