முகப்பு
தஞ்சாவூர்

குளக்கரையில் தென்னங்கன்றுகள் நடவு

உலக தென்னை தினத்தை முன்னிட்டு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில் பழைய பேராவூரணியில் உள்ள குளக்கரையைச் சுற்றி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

உலக தென்னை தினத்தை முன்னிட்டு பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயா் லயன்ஸ் சங்கம் சாா்பில் பழைய பேராவூரணியில் உள்ள குளக்கரையைச் சுற்றி தென்னங்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 

லயன்ஸ் சங்கத் தலைவா் எஸ். பாண்டியராஜன் தலைமை வகித்தாா். செயலா் எம்.எஸ். ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். சங்க சாசன உறுப்பினா் ரமேஷ் வழங்கிய 50 தென்னங்கன்றுகள் குளக்கரையைச் சுற்றிலும் நடப்பட்டன. 

லயன்ஸ் மாவட்டத் தலைவா்கள் எம். நீலகண்டன், கே. இளங்கோ, மண்டல ஒருங்கிணைப்பாளா் வ. பாலசுப்ரமணியன், பேரூராட்சி உறுப்பினா்கள் ஆனந்தன், காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.