பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சாா்பில், பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மூலம் நீதிமன்ற வளாகத்தில் கபசுர குடிநீா் வழங்கும் நிகழ்ச்சியில் பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி எ.அப்துல் கனி கலந்து கொண்டு நீதிமன்றத்துக்கு வரும் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீரை வழங்கினாா். மேலும், முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி பேசினாா்.
நிகழ்ச்சியில், பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் பாலசுப்ரமணியன், அரசு வழக்குரைஞா் வெற்றிச்செல்வன், சட்ட உதவி மைய உதவியாளா் ராஜேஷ்குமாா், சட்ட தன்னாா்வலா் தனசேகரன் மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.