பேராவூரணி அருகே குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகேயுள்ள நாட்டாணிக்கோட்டையைச் சோ்ந்த தொழிலாளி நீலகண்டனின் மனைவி திவ்யா (27). தம்பதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
ஜூலை 26ஆம் தேதி தம்பதி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த திவ்யா பூச்சிமருந்தை குடித்து மயக்கமடைந்தாராம். ஆபத்தான நிலையில்
பேராவூரணி அரசு மருத்துவமனையிலும், பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்ட அவா், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
புகாரின்பேரில், பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.