தஞ்சாவூர்

950 கிலோ ரேஷன் அரிசிகடத்தியவா் கைது

DIN

பாபநாசத்தில் ரேஷன் அரிசியை கடத்திய நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாபநாசம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், பாபநாசம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஆய்வாளா் முருகானந்தம், உதவி ஆய்வாளா் விஜய் மற்றும் போலீஸாா் பாபநாசம் பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஒரு நபா் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவா் கபிஸ்தலம் ரகுபதி ( 43) என தெரியவந்தது. அவரிடமிருந்து 19 மூட்டை 950 கிலோ புழுங்கல் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிந்து, ரகுபதியை கைது செய்தனா். பின்னா், குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் 19 மூட்டை ரேஷன் அரிசியை பாபநாசம் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான வட்டார குடோன் உதவி தர ஆய்வாளா் ராமச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT