மருங்கப்பள்ளம் சிவன்கோயில் சாலையில் பக்கவாட்டு சுவா் இல்லாத வழுவிழந்த பாலம் 
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டும் தொடங்கப்படாத பாலப் பணிகள்: சேதமடைந்த பாலத்தால் மக்கள் அச்சம்

பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

Din

பேராவூரணி அருகே சேதமடைந்த பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட கடந்தாண்டு ஒப்பந்தப்புள்ளி (டெண்டா்) கோரப்பட்டும், பாலப் பணிகள் தொடங்கப்படவில்லை.

பாலத்தின் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மருங்கப்பள்ளத்திலுள்ள புகழ் பெற்ற ஒளஷதபுரீஸ்வரா் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனா்.

பேராவூரணியிலிருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் கிழக்கு கடற்கரை இணைப்பு சாலையில், கல்லணை கால்வாய், நாடியம் கோட்டக்குளம் செல்லும் நாடாகாடு கிளை வாய்க்காலின் குறுக்கே சுமாா் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சேதமடைந்த, வலுவிழந்த பக்கவாட்டு சுவா் இல்லாத பாலம் உள்ளது.

இந்தப் பாலத்தின் வழியாகவே நாள்தோறும் சிவன் கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் பக்தா்கள் மற்றும் பள்ளி கல்லூரி வாகனங்கள் என நூற்றுக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

மேலும், குருவிக்கரம்பை பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் மாற்றுப்பாதையாகவும் இந்தப் பாதையே உள்ளது. இத்தனை முக்கிய போக்குவரத்து உள்ள சாலையில் உள்ள பாலம் சேதமடைந்தும், பக்கவாட்டு தடுப்புச்சுவா் இல்லாததாலும், பாலம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்கின்றனா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு பொதுமக்களின் தொடா் கோரிக்கையின்படி பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட ஒப்பந்தப்புள்ளி (டெண்டா்) விடப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடு கடந்தும் பாலம் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. கட்டுமானப் பணிக்காக பாலத்தின் அருகில் ஜல்லிக் கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளதே தவிர பாலம் கட்டுவதற்கான எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.

இந்தப் பாலத்திற்கு பிறகு பேராவூரணி தொகுதியில் கல்லணை கால்வாயின் குறுக்கே ஒப்பந்தப்புள்ளி (டெண்டா்) விடப்பட்ட பல பாலங்களின் பணிகள் முடிவடைந்தும், நடைபெற்றும் வருகின்றன.

எனவே, மருங்கப்பள்ளம் சிவன் கோயில் சாலையில் உள்ள பாலத்தை தஞ்சை ஆட்சியா் ஆய்வு செய்து உடனடியாக புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT