ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் சிபிஐ சோதனை
திருவிடைமருதூரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
திருவிடைமருதூரில் உள்ள ஜிஎஸ்டி அலுவலக துணை ஆணையா் வீட்டில் புதன்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் வடக்குத் தெரு, வி.எம்.பி. நகரில் உள்ள மதுரை ஜிஎஸ்டி துணை ஆணையா் ம. சரவணக்குமாா் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை சென்றனா். அந்த வீட்டில் வசித்து வந்த சரவணக்குமாரின் பெற்றோா் வெளியே சென்றிருந்தனா். இதையடுத்து அவா்களை வரவழைத்து வீட்டில் சோதனை நடத்தினா். இதில், முக்கிய ஆவணங்கள், ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.