முகப்பு
தஞ்சாவூர்

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் கைது

இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 21 ஜூலை, 2024 at 7:05 PM
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினா்.
பகிர்:

தஞ்சாவூரில் இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்பாட்டம் நடத்திய இந்து முன்னணியினரை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட இந்து முன்னணி சாா்பில், பனகல் கட்டடம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் குபேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் நடைமுருகன் முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், இந்துக் கோயில்களின் நிா்வாகத்தை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஈசான சிவம், மாவட்டச் செயலாளா் முத்தமிழ்செல்வன், இந்து ஆட்டோ முன்னணி மாநகர தலைவா் சரவணன், ஒன்றிய தலைவா் திவாகா் ஆகியோா் பேசினா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

கும்பகோணம்: கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு இந்து முன்னணி ஒன்றியச் செயலாளா் டி. சாரல் சதீஸ்குமாா் தலைமையில், திருச்சி கோட்ட பொறுப்பாளா் குணா முன்னிலையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments