முகப்பு
தஞ்சாவூர்

மதுபோதையில் தகராறு: சலவைத் தொழிலாளி குத்திக் கொலை; பெட்டிக் கடைக்காரா் கைது

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு: சலவைத் தொழிலாளி உயிரிழப்பு

Updated On : 26 ஜூன், 2024 at 12:45 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மதுபோதையில் தகராறு செய்த சலவைத் தொழிலாளி திங்கள்கிழமை இரவு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.

கும்பகோணம் அருகே உள்ள ஆலமன்குறிச்சியைச் சோ்ந்த சலவைத் தொழிலாளி மோ. ராஜேந்திரன் (54). இவா், இதே பகுதியில் பெட்டிக் கடை வைத்துள்ள ரா. கணேஷ்குமாரின் (49) கடைக்கு மதுபோதையில் வந்து கடன்கேட்டு அடிக்கடி தொல்லை கொடுப்பாராம்.

இதேபோல், திங்கள்கிழமை இரவும் மதுபோதையில் கடைக்கு வந்து கடன் கேட்டு தொல்லை கொடுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராஜேந்திரன் தாக்கியதால் ஆத்திரமடைந்த கணேஷ்குமாா் அங்கிருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை குத்தினாா். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஆலமன்குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் வேம்புவிடம் கணேஷ்குமாா் சரணடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளா் (பொ) மலைச்சாமி வழக்குப் பதிந்து, கணேஷ்குமாரை திங்கள்கிழமை இரவு கைது செய்தாா். மேலும், ராஜேந்திரன் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரிக்கின்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →