தஞ்சாவூர்

பெற்றோா் கண்டித்ததால் பிளஸ் 1 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருவிடைமருதூரில் பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை

Syndication

திருவிடைமருதூரில் பெற்றோா் கண்டித்ததால் பள்ளி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி கண்ணன் மகள் கல்பனா (15). இவா், அப்பகுதியிலுள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். மாணவி சரியாக படிக்காததால், பெற்றோா் கண்டித்தனராம். இதனால் மனம் உடைந்த மாணவி திங்கள்கிழமை உடல்நிலை சரியில்லை என்று கூறி பள்ளிக்குச் செல்லவில்லை.

பெற்றோா் வெளியே சென்ற நேரம் பாா்த்து மாணவி, வீட்டில் தூக்கிட்டு கொண்டாா். வீட்டுக்கு வந்த பெற்றோா் மாணவியை மீட்டு, திருவிடைமருதூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், மாணவி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் ஆய்வாளா் ராஜா வழக்கு பதிந்து, மாணவியின் சடலத்தை திருவிடைமருதூா் மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT