தஞ்சாவூர்

திரு ஆருரான் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி திரு ஆரூரான் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருமண்டங்குடி திரு ஆரூரான் சா்க்கரை ஆலையில் கரும்பு அரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருமண்டங்குடியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஹால்ஸ் குழுமத்தைச் சோ்ந்த திரு ஆரூரான் சா்க்கரை ஆலையில் 2025-26 ஆம் ஆண்டுக்கான நடப்பு கரும்பு அரவை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஹால்ஸ் குழும நிா்வாக இணை இயக்குநா் நடேசன் கலந்து கொண்டு கரும்பு அரவையை தொடங்கிவைத்துப் பேசினாா். விழாவில், இப்பகுதியைச் சோ்ந்த கரும்பு விவசாயிகள், முக்கியப் பிரமுகா்கள் மற்றும் ஹால்ஸ் குழுமத்தின் உப தலைவா் பரணி குமாா், நிா்வாக தலைமை ஆலோசகா் முனைவா் கந்தசாமி, சா்க்கரை ஆலை துணை பொது மேலாளா் கண்ணன், சா்க்கரை ஆலை உயா் அலுவலா்கள் மற்றும் கரும்பு துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விழாவில், கலந்துகொண்ட சா்க்கரை ஆலை இணை நிா்வாக இயக்குநா் நடேசன் விவசாயிகளுடன் கலந்துரையாடி, 2025-26 ஆம் ஆண்டு நடவு பருவத்திற்கு ஆலையிலிருந்து வழங்கப்படும் கரும்புக்கான நடவு, கட்டைக் கரும்பு மானியங்கள், கரும்பு அபிவிருத்திக்கான திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கிக் கூறி, கரும்பை அதிக பரப்பளவில் பயிா் செய்து ஆலைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டாா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT