தஞ்சாவூர்

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரி பாமக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் மற்றும் வன்னியா் சங்கத்தினா்.

Syndication

தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே பாமகவினா், வன்னியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பாமக நிறுவனா் தலைவா் ச. ராமதாஸ் அறிவிப்பின்படி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த கோரியும், வன்னியா்களுக்கு 10.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு பாமக மாவட்டச் செயலரும், ஆடுதுறை பேரூராட்சித் தலைவருமான ம.க. ஸ்டாலின் தலைமை வகித்தாா். வன்னியா் சங்க மாவட்டச் செயலா் மதி விமல், எம். ராம்குமாா், மாவட்டத் தலைவா்கள் தீ. தமிழ்ச்செல்வம், எம். ரமேஷ், செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் பானுமதி சத்தியமூா்த்தி, மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ்.பி. குமாா், கோ. ரவிச்சந்திரன், மாவட்ட இளைஞா் சங்கச் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் பேசினா்.

பாமக மாவட்டச் செயலா்கள் கோபி சந்தா், ப. தியாகராஜன், மாநிலப் பொதுக் குழு உறுப்பினா்கள் ச. பெரியசாமி, திருஞானம்பிள்ளை, கே.பி. சுப்பிரமணியன், மாவட்ட அமைப்புச் செயலா் எஸ்.கே. ரமேஷ் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஜிஎஸ்டி மோசடி மூலம் ரூ.3,000 கோடி வரி ஏய்ப்பு!

ஆஷஸ் 3-ஆவது டெஸ்ட்: ஆஸி. அணியை வீழ்த்துமா இங்கிலாந்து? அணியில் முக்கிய மாற்றம்!

நடிகர் நாசருக்கு கலைஞர் விருது!

ஒரு சவரன் ரூ. 1,00,000... எட்டாக்கனியாகும் தங்கம்!

தவெக கூட்டம்: தொண்டர்களின் பாதுகாப்புக்காக முள் கம்பி சுற்றப்படும் - செங்கோட்டையன்

SCROLL FOR NEXT