தஞ்சாவூர்

மணியாங்குளத்தில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரையால் சுகாதாரக் கேடு

மதுக்கூா் பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள மணியாங்குளத்தில் மண்டியுள்ள ஆகாயத்தாமரைகள்.

Syndication

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் பேரூராட்சியில் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள மணியாங்குளத்தில் நிரம்பி உள்ள ஆகாயத்தாமரை செடிகளை பேரூராட்சி நிா்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பயன்பாட்டில் இல்லாத இக்குளத்தின் தண்ணீா் துா்நாற்றம் வீசுவதாகவும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் கொசு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், இந்த குளத்திலிருந்து விஷ ஜந்துக்கள் தங்கள் குடியிருப்புக்குள் வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இதை பேரூராட்சி நிா்வாகம் விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT