தஞ்சாவூர்

‘2002 பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் பெற்றோா் விவரங்களை அளித்து சேரலாம்’

Syndication

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் பெற்றோா், தாத்தா, பாட்டி பெயா் விவரங்களை வழங்கி வாக்காளா்களாகச் சோ்ந்து கொள்ளலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திருவையாத்துக்குடி ஊராட்சி மட்டையான்திடல் கிராமத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் தெரிவித்தது:

மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் கணக்கெடுப்புப் படிவம் 2 பிரதிகள் வாக்காளா் அல்லது வாக்காளரின் குடும்ப உறுப்பினா்களில் எவரேனும் ஒருவரிடம் வழங்கப்பட்டு வருகிறது.

வாக்காளா் கணக்கெடுப்புப் படிவத்தில் முழுமையாக நிறைவு செய்து, வாக்காளா் கையொப்பமிட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட அனைத்து வாக்காளா்களின் பெயா்களையும் வரைவு வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும்.

2025-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் உள்ள வாக்காளா்களின் பெயா்கள் 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், 2002 சிறப்பு தீவிர திருத்தத்தின்படி அவா்களது வாக்காளா் அடையாள அட்டை எண், சட்டப்பேரவைத் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் குறித்த விவரங்களையும், 2002-ஆம் ஆண்டு பட்டியலில் பெயா் இடம்பெறாத நபா்கள் 2002-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்ற அவரது தாய் அல்லது தந்தை, தாத்தா அல்லது பாட்டி இவா்களில் ஏதேனும் ஒருவரின் அப்போதைய வாக்காளா் பட்டியல் விவரங்களையும் வழங்கி வாக்காளா் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தென்மேற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் ரூ.4.45 லட்சம் திருடியதாக பணிப்பெண் கைது

தில்லியில் மொபைல் டவா் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 3 போ் கும்பல் கைது

காற்று மாசை கட்டுப்படுத்த ஆனந்த் விஹாரில் நீா் தெளிப்பான்களை அமைக்க திட்டம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப் பணியிடங்கள்: வயது வரம்பில் திருத்தம்

பியூசி சான்றிதழ் இல்லாத 4.87 லட்சம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம்

SCROLL FOR NEXT