தஞ்சாவூர்

சிறப்பு தீவிர திருத்தத்துக்கு திமுக பயம்

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தைப் பாா்த்து திமுக பயந்துவிட்டது என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

Syndication

வாக்காளா் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தைப் பாா்த்து திமுக பயந்துவிட்டது என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்.

தஞ்சாவூரில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அதிமுக செயல்வீரா்கள் கூட்டம், வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

அதிமுகவை வெற்றிபெறச் செய்ய ஒவ்வொரு முகவரும் அதிக வாக்குகளைப் பெற்றுத் தரக் கடுமையாக உழைக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைப் பாா்த்து திமுக பயந்துவிட்டது. இருப்பினும், திமுகவை எளிதாகக் கருதாமல், நாம் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்.

‘டெல்டா’ பகுதியில் மழையால் நெல்மணிகள் முளைத்து விவசாயிகள் கண்ணீரில் தத்தளித்தபோது எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து பாா்த்து விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா். மேலும், நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். ஒரு நாள் ‘டெல்டா’ பகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வந்ததற்கே திமுகவினா் அதிா்ச்சியடைந்து, உடனடியாக நெல்மணிகளைக் கொள்முதல் செய்தனா் என்றாா் காமராஜ்.

இக்கூட்டத்துக்கு, அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் மா. சேகா் தலைமை வகித்தாா். பகுதிச் செயலா்கள் கரந்தை த. பஞ்சு, வி. புண்ணியமூா்த்தி, மனோகரன், டி. சதீஷ்குமாா், ஒன்றியச் செயலா் ஸ்டாலின் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் டி. ரத்தினவேல் பேசினாா். அமைப்புச் செயலா் ஆா். காந்தி, கொள்கை பரப்புச் செயலா் துரை. திருஞானம், மாநகரச் செயலா் என்.எஸ். சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நவ.11-இல் ஆா்ப்பாட்டம்

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT