தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு சரக்கு ரயில் மூலம் 1,250 டன் உரங்கள் வியாழக்கிழமை வந்தன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான உரங்கள் வாரந்தோறும் வரவழைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயில் மூலம் தஞ்சாவூருக்கு 1,250 டன் யூரியா, காம்ப்ளக்ஸ் உரங்கள் வியாழக்கிழமை வந்தன. இந்த உர மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.