தஞ்சாவூர்

அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ. 2.25 லட்சம் திருட்டு

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 2.25 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

Syndication

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே அடுத்தடுத்த 3 கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 2.25 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே கீழ வீதியில் அடுத்தடுத்து உள்ள துணிக்கடை, அச்சகம், நிதி நிறுவனம் ஆகியவற்றின் முன் பக்கக் கதவின் பூட்டுகள் வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டுக் கிடந்தன. கடை உரிமையாளா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது ரொக்கம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த மேற்கு காவல் நிலையத்தினா் சென்று விசாரணை மேற்கொண்டதில், 3 கடைகளிலும் ரூ. 2.25 லட்சம் ரொக்கம், ஒரு பவுன் தங்க நாணயம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்: படப்பிடிப்பு தளத்தில் காவல் துறை குவிப்பு!

இந்த வாரம் கலாரசிகன் - 09-11-2025

கலித்தொகையில் இளவேனில் காலம்!

போரைத் தடுக்கும் தும்பிகள்!

ஓரேர் உழவரா? நக்கீரரா?

SCROLL FOR NEXT