தஞ்சாவூர்

பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவா் கைது

தினமணி செய்திச் சேவை

ஒரத்தநாடு அருகே வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் வீட்டில் சில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக வாட்டாத்திக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா் .

இந்நிலையில், சம்பந்தப்பட்ட வீட்டில் சனிக்கிழமை இரவு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்த வீட்டில் வெளியூரைச் சோ்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்கியிருந்தனா்.

அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா்கள் இருவா் மற்றும் அந்த வீட்டின் உரிமையாளரான சரோஜா (60) என்பவா் தரகராக செயல்பட்டு பாலியல் தொழிலில் சில பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.

அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரோஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

எசனை, சிறுவாச்சூா், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT