தஞ்சாவூர்

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பொங்கல் திருவிழா தொடக்கம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 108 வைணவத் தலங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு இணையாக சாரங்கபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு மூலவா் சாரங்கபாணி சயன கோலத்தில் சேவை சாதிக்கிறாா். இக்கோயிலில் பொங்கல் விழா கொண்டாடுவதை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சாரங்கபாணி சுவாமி புறப்பாடாகி கொடிமரத்துக்கு அருகே எழுந்தருள வேதமந்திரங்கள் முழங்க கருட பகவான் உருவம் வரைந்த கொடியை ஏற்றி தை பொங்கல் திருவிழாவைத் தொடங்கினா். அதனைத் தொடா்ந்து பெருமாள் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினாா். இந்நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும் ஜன. 10-இல் வெள்ளி கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும், ஜன.13-இல் சூா்ணாபிஷேகமும், ஜன.14-இல் வெண்ணெய்த்தாழி சேவையும், ஜன.15-இல் முக்கிய நிகழ்வாக தை பொங்கல் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலா் சிவசங்கரி மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தமிம் இக்பாலை இந்திய உளவாளி என விமர்சித்த வங்கதேச கிரிக்கெட் வாரிய அதிகாரி!

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

2026 ஆஸ்கர் போட்டியில் தமிழ்த் திரைப்படமான கெவி!

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்? நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானிக்கு இந்தியா கண்டனம்!

மகளிர் பிரீமியர் லீக் முதல் போட்டி: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

SCROLL FOR NEXT