திருச்சி

இனிப்பக உரிமையாளர் மனைவியிடம் நகைபறிப்பு

மணப்பாறையில் இனிப்பக  உரிமையாளர் மனைவியிடம், 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

DIN

மணப்பாறையில் இனிப்பக  உரிமையாளர் மனைவியிடம், 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மணப்பாறை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் கோவில்பட்டி சாலையில் இனிப்பகம் நடத்தி வருகிறார்.  கணவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக அவரது மனைவி சிவசங்கரி, தனது மகளை அழைத்துக் கொண்டு இனிப்பகத்துக்கு  சனிக்கிழமை  வந்தார்.
உணவைக் கொடுத்த பின்னர் வீட்டுக்கு சிவசங்கரி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், சிவசங்கரி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.  
இதில் சிவசங்கரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த  கார்த்திகேயன், மணப்பாறை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார்.
இதன் பேரில் மணப்பாறை காவல் ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அங்குள்ள சி.சி.டிவி. கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு  நகைபறிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதா நகல்களை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!

தடைசெய்யப்பட்ட ‘துரந்தர்’ பட பாடலுடன் என்ட்ரி.. சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அதிபர் மகன்!

துல்கர் படத்தில் இணைந்த கயாது லோஹர்!

வினா - விடை வங்கி... முந்தைய ஆண்டு வினாக்கள்! - 9

இந்திய அணியில் விளையாடிய பாகிஸ்தான் கபடி வீரர் மீது நடவடிக்கை!

SCROLL FOR NEXT