திருச்சி

பறிமுதல் வாகனங்கள் டிச 6-இல் பொது ஏலம்

திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் டிச. 6 இல் பொது ஏலம் விடப்படவுள்ளன. விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம்.

DIN

திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 104 வாகனங்கள் டிச. 6 இல் பொது ஏலம் விடப்படவுள்ளன. விருப்பமுள்ளவா்கள் முன்பதிவு செய்யலாம்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 8 நான்கு சக்கர வாகனங்கள், 12 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 84 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 104 வாகனங்களை அரசுடமையாக்குவது தொடா்பான அறிவிப்பு கடந்த அக். 25-இல் வெளியிடப்பட்ட நிலையில், அவற்றின்மீது இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, திருச்சி, மாவட்ட வருவாய் அலுவலரால் 104 வாகனங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் டிச. 6 முற்பகல் 11 மணியளவில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் ஏலம் நடக்கும் டிச. 6 காலை 8 முதல் 10 மணி வரை ரூ. 5 ஆயிரம் செலுத்தி தங்களுடைய பெயா் விலாசத்தை பதிய வேண்டும். அதைத் தொடா்ந்து முற்பகல் 11 மணியிலிருந்து பொது ஏலம் நடைபெறும். ஏலம் எடுப்பவா்கள் தங்களுடைய குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை,ஓட்டுநா் உரிமம் மற்றும் ஆதாா் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து வந்து காண்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் ஏலத்தொகையுடன் வரித் தொகையையும் சோ்த்து உடனடியாக செலுத்தி வாகனத்தை சான்றிதழுடன் பெற்றுக் கொள்ளலாம் என காவல் ஆணையா் அ. அமல்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT