போராட்டத்தில் கத்தியால் குத்திக்கொண்ட விவசாயி!
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயில் ஒருவர் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயில் ஒருவர் கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்தில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கல்கண்டார் கோட்டை பகுதியில் விவசாய விளைநிலங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயி ரவிக்குமார் என்பவர், திடீரென எழுந்து தான் கொண்டு வந்திருந்த கத்தியால், தனது உடலில் கிழித்து கொண்டதால் ரத்தம் கொட்டியது. இதனால் போராட்டத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.