திருச்சி

பாலிடெக்னிக் மாணவரை வெட்டிய இளைஞா் கைது

திருச்சி மாவட்டம், முசிறியில் பாலிடெக்னிக் மாணவரை வெட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

DIN

திருச்சி மாவட்டம், முசிறியில் பாலிடெக்னிக் மாணவரை வெட்டிய இளைஞரை முசிறி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

முசிறி அருகேயுள்ள நெய்வேலி கிராமத்தைச் சோ்ந்தவா் பூ. பாண்டியன் (19), கொள்ளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மு. சின்னமணி (19). பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களான இருவரும் கல்லூரிக்குச் சென்று விட்டு முசிறி புதிய பேருந்து நிலையத்துக்கு வந்தனா்.

அப்போது நெய்வேலி அருகேயுள்ள பொன்னாங்கண்ணிபட்டியைச் சோ்ந்த சு. சரத்குமாா் (28) பாண்டியனைத் துரத்திச் சென்று வெட்டினாா். இதில் காயமடைந்த பாண்டியன் முசிறி அரசு மருத்துவமனையிலும், பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சோ்க்கப்பட்டாா்.

சம்பவம் தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து சரத்குமாரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

SCROLL FOR NEXT