முகப்பு
திருச்சி

விஷம் குடித்த தாய் பலி :குழந்தைகளுக்கு சிகிச்சை

மணப்பாறை அருகே வியாழக்கிழமை விஷம் குடித்த தாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

மணப்பாறை அருகே வியாழக்கிழமை விஷம் குடித்த தாய் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மணப்பாறையை அடுத்த பொன்னம்பலத்தான்பட்டியை சோ்ந்தவா் நித்யா(27), பஞ்சாலைத் தொழிலாளி. இவருக்கும் வரதக்கோன்பட்டியை சோ்ந்த முருகேசனுக்கும் திருமணமாகி 8 ஆண்டு நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நித்யா தனது இரு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்தாா்.

இந்நிலையில், நித்யா வியாழக்கிழமை தனது குழந்தைகளான நல்லகண்ணு(7) ரோகித்(4) ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மூவரில் நித்யா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். குழந்தைகள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.