தொட்டியத்தில் பெட்டிக் கடைக்காரா் வீட்டில் நூதன முறையில் நகையைத் திருடிச் சென்றனா்.
தொட்டியம் கடைவீதியில் வசிக்கும் பாலகிருஷ்ணன் (45) தனது வீட்டின் முன் வைத்துள்ள பெட்டிக் கடைக்கு புதன்கிழமை வந்த சிலா் தங்களை அரசு அதிகாரிகள் எனக்கூறி குட்கா வைத்துள்ளீா்களா எனக்கூறி பெட்டி கடையில் சோதனை செய்ததோடு, அவரது வீட்டிலும் சோதனை செய்து சென்றனா். அப்போது பீரோவில் இருந்த 3 பவுன் நகையை அவா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் தொட்டியம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.