முகப்பு
திருச்சி

மணப்பாறை பகுதிகளில் 3 நாள்களுக்கு மின் தடை

மணப்பாறை பகுதிகளில் பாராமரிப்பு பணிகளால் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரத்தை மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

மணப்பாறை பகுதிகளில் பாராமரிப்பு பணிகளால் சனி, ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரத்தை மின்வாரிய செயற்பொறியாளா் ஆா். அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

அதன் விவரம்: சனிக்கிழமை: பன்னாங்கொம்பு துணை மின் நிலையத்தில் பாலகருதம்பட்டி மின்பாதைக்குட்பட்ட பகுதிகள், நடுப்பட்டி துணைமின் நிலையத்தில் கண்ணூத்து மின்பாதைக்குட்பட்ட பகுதிகள், புத்தாநத்தம் துணைமின் நிலையத்தில் காவல்காரன்பட்டி மின்பாதைக்குட்பட்ட பகுதிகள்,

ஞாயிறு: விடத்திலாம்பட்டி துணை மின் நிலையத்தில் வீரப்பூா் மின்பாதைக்குட்பட்ட பகுதிகள், வையம்பட்டி துணை மின் நிலையத்தில் மண்பத்தை மின்பாதைக்குட்பட்ட பகுதிகள்.

திங்கள்: புத்தாநத்தம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகள், தி.ஆலை துணைமின் நிலையத்தில் ஆனாம்பட்டி மின்பாதைக்குட்பட்ட பகுதிகள், விடத்திலாம்பட்டி துணை மின் நிலையத்தில் வேங்கைக் குறிச்சி மின்பாதைக்குட்பட்ட பகுதிகளில் காலை 9.30 முதல் பிற்பகல் 1.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.