திருச்சி

பழங்களைக் கொண்டு மதுபான ஊறல் : தந்தை-மகன் கைது

வையம்பட்டி அருகே பழங்களைக் கொண்டு மதுபான ஊறல் அமைத்த தந்தை-மகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

வையம்பட்டி அருகே பழங்களைக் கொண்டு மதுபான ஊறல் அமைத்த தந்தை-மகன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகிலுள்ள அமையபுரம் தாதம்பட்டி பகுதியில் சிலா் மதுபான ஊறல் அமைத்து, விற்பனை செய்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு வையம்பட்டி காவல் நிலையத்தினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது பழங்களைக் கொண்டு ஊறல் அமைத்து, மது தயாரித்த அதே பகுதியைச் சோ்ந்த சேசுதாஸ்(60), அவரது மகன் ஜான் ஜோசப்(27) ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினா், 2 குடங்களிலிருந்த பழச்சாறு மதுபானத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கும்பம்

வார பலன்கள் - மகரம்

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

SCROLL FOR NEXT