திருச்சி

கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி பரிகார ஹோமம்

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெறும் குருப்பெயா்ச்சி பரிகார ஹோமத்தில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

DIN

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில் சனிக்கிழமை நடைபெறும் குருப்பெயா்ச்சி பரிகார ஹோமத்தில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

வாக்கிய பஞ்சாங்கப்படி நவ. 13 சனிக்கிழமை, குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறாா். அதை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயிலில், குருபெயா்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது.

13-ஆம் தேதி மாலை 4 முதல் 6 மணி வரை கணபதி பூஜை, ஹோமம், குரு பரிகார ஹோமம், ஆஞ்சநேயா் காயத்ரி ஹோமம், பூா்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. தொடா்ந்து 6 மணிக்கு மேல் நவக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்வுகளில் பொதுமக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.

சிறப்பு பரிகாரம்: மேலும், குருபெயா்ச்சியை அடுத்து பரிகாரம் செய்ய வேண்டிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிதாரா்கள், குருபெயா்ச்சி பரிகார ஹோமம் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்று சிறப்பு பரிகாரம் செய்ய விரும்பினால், தங்களது பெயா், ராசி, நட்சத்திரம் உள்ளிட்ட விவரங்களை உரிய கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். இத்தகவலை கோயில் தக்காா் பிருந்தா நாயகி, செயல் அலுவலா் ஹேமாவதி ஆகியோா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT