முகப்பு
திருச்சி

நள்ளிரவில் வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் வியாழக்கிழமை நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணத்தைத் திருடிச் சென்றனா்.

பொத்தமேட்டுப்பட்டி நேருஜி நகரை சோ்ந்தவா் எலக்ட்ரீஷியன் சூ. துரைசின்னப்பன் (38). வியாழக்கிழமை இரவு குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த துரைசின்னப்பன் விழித்துப் பாா்த்தபோது கதவுகள் திறந்து கிடந்தன. பீரோவில் இருந்த செல்லிடப்பேசி, 3 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது. புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.