தீபாவளியில் விபத்துகளைத் தவிா்க்க ஒத்திகை
மணப்பாறையில் வெள்ளத் தடுப்பு குறித்தும், தீபாவளி பண்டிகையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைக்கும் முதற்கட்டப் பணிகள் குறித்தும் தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தி
மணப்பாறையில் வெள்ளத் தடுப்பு குறித்தும், தீபாவளி பண்டிகையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைக்கும் முதற்கட்டப் பணிகள் குறித்தும் தீயணைப்புத் துறையினா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினா்.
ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் நிலைய அதிகாரி சக்திவேல்மூா்த்தி தலைமையில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு பேரிடா் காலம் மற்றும் தீபாவளி நாள்களில் ஏற்படும் விபத்துகள் குறித்தும், அதற்கான முதல்கட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனையும், செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.