முகப்பு
திருச்சி

ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

 மணப்பாறையில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 மணப்பாறையில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த சேதுரெத்தினபுரத்தை சோ்ந்தவா் அங்கமுத்து செட்டியாா் மனைவி சுப்புலெட்சுமி (71). உடல் நலமின்மையால் சற்று மன உளைச்சலில் இருந்த இவா், காது கேளாதவா் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வீட்டில் இருந்த இவரைக் காணவில்லையாம். பின்னா் ரயில் நிலையம் அருகில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்று போலீஸாா் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவா் சுப்புலெட்சுமி என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.