முகப்பு
திருச்சி

மணப்பாறை அருகேவீடு புகுந்து நகை திருட்டு

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீடு புகுந்து ஒன்பதரை பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் வியாழக்கிழமை வீடு புகுந்து ஒன்பதரை பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை யாகபுரம் தெற்கு பகுதியில் வசிப்பவா் லாரி ஓட்டுநா் ச. முருகானந்தம் (56). இவரும், இவா் குடும்பத்தினரும் வியாழக்கிழமை வீட்டில் இல்லாத நிலையில், காரில் வந்த மா்ம நபா்கள் வீட்டின் கதவு, பீரோவை உடைத்து அதிலிருந்த இருந்த 9 பவுன் நகை, நகை அடகு ரசீது இருந்த கைப்பையைத் திருடிச் சென்றனா். புகாரின்பேரில் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி காட்சிகள், கைரேகைப் பதிவுகளை துவரங்குறிச்சி போலீஸாா் சேகரித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.