ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்ற தேரோட்ட விழா. 
திருச்சி

ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்ட விழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேரோட்ட விழா ஞாயிற்றுக்கிழமை ஆளும் பல்லக்கு நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடங்கி 11 நாள்கள் நடைபெற்ற சித்திரைத் தேரோட்டத் திருவிழாவில் நாள்தோறும் நம்பெருமாள் காலை, மாலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை ஆளும் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் 3.30-க்கு கருடமண்டபம் வந்தாா். இரவு 7.15 -க்கு அங்கிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்துக்கு வந்து சோ்ந்தாா். அங்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆளும் பல்லக்கில் அவா் எழுந்தருளி ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT