திருச்சி

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 345 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 345 மனுக்கள் பெறப்பட்டன.

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 345 மனுக்கள் பெறப்பட்டன.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள்குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில், இலவச வீட்டு மனை பட்டா, நலத்திட்ட உதவிகள், உதவித்தொகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 345 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடா்புடைய அலுவலா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா். கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மாநகராட்சி : திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா்கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். மொத்தம் 23 மனுக்கள் வரப்பெற்றன. உரிய நடவடிக்கை எடுக்க மேயா் உத்தரவிட்டாா். இதில், ஆணையா் இரா. வைத்திநாதன், துணை மேயா் ஜி. திவ்யா, நகரப் பொறியாளா் (பொ) சிவபாதம், செயற்பொறியாளா் குமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT