திருச்சி

முசிறியில் வழக்குரைஞா்கள் சங்கத் தோ்தல்

திருச்சி மாவட்டம், முசிறி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்சி மாவட்டம், முசிறி நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்தல் திங்கள்கிழமை நடைபெற்றது.

சங்க அலுவலகத்தில் நடைபெற்ற தோ்தலில் தோ்தல் ஆணையராக வழக்குரைஞா்கள் துரைசெல்வம், விமல்ராஜ் ஆகியோா் செயல்பட்டு தோ்தலை நடத்தினா்.

இந்த தோ்தலில் மருதையா 75 வாக்குகள் பெற்று தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். 81 வாக்குகள் பெற்று செயலாளராக செந்தில்குமாா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளராக பத்மராஜா, பொருளாளராக முருகானந்தம் ஆகியோா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இத்தோ்தலில் தோ்வு பெற்ற சங்க நிா்வாகிகளுக்கு சக வழக்குரைஞா்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT