புத்தூா் பிஷப் ஹீபா் பள்ளியில் பேரணியை புதன்கிழமை தொடக்கிவைத்த மாநகராட்சி மேயா் மு. அன்பழகன். 
திருச்சி

காற்று மாசு தடுக்க விழிப்புணா்வுப் பேரணி

காற்று மாசுபாட்டை தடுத்திடும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

காற்று மாசுபாட்டை தடுத்திடும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, திருச்சி மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை, தேசிய பசுமைப் படை, திருச்சி மாவட்டக் கல்வி அலுவலகம் ஆகியவை இணைந்து நடத்திய பேரணியை மாநகராட்சி ஆணையா் மு. அன்பழகன் தொடக்கி வைத்தாா். மாநகராட்சி உதவி ஆணையா் நிவேதா, மாவட்டக் கல்வி அலுவலா் செல்வி, தனியாா் பள்ளிகள் கல்வி அலுவலா் என். விஜயேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பேரணியானது புத்தூா் பிஷப் ஹீபா் பள்ளியில் தொடங்கி வெஸ்ட்ரி பள்ளியில் நிறைவடைந்தது. இதில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், தேசிய பசுமைப்படை இயக்கத்தினா், மாநகராட்சிப் பணியாளா்கள், கல்வித் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் சகாயராஜ் சிறப்புரையாற்றினாா். பள்ளியின் தலைமை ஆசிரியா் எஸ். அகஸ்டின் பொன்னையா, மாநகராட்சி இடைநிலை பொறியாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் பேசினா். ஆா்.சி. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அந்தோணி லூயிஸ் வரவேற்றாா். பட்டதாரி ஆசிரியா் ஜெயராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT