பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் 
திருச்சி

மணப்பாறையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

மணப்பாறையில் பாத்திமா மலை பகுதியில் உள்ள ஈத்கா திடலில் நடைபெற்ற ஈகைப் பெருநாள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

DIN

 
மணப்பாறையில் பாத்திமா மலை பகுதியில் உள்ள ஈத்கா திடலில் நடைபெற்ற ஈகைப் பெருநாள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் திருநாளாம் ஈகைப் பெருநாள் பக்ரீத் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இதனையொட்டி மணப்பாறை பாத்திமா மலையில் ஈத்கா திடல் அமைக்கப்பட்டு ஈகைத்திருநாள் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

ஈகைப்பெருநாள் தொழுகைக்கு பின் உலக நலன் வேண்டி, நாடு வளமாகவும், நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும் தூஆ கேட்டு சிறப்பு பிராத்தனையும் நடைபெற்றது.

தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவி தங்களது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியினையும் பகிர்ந்துகொண்டனர். 

இதேபோன்று புத்தாநத்தம், இளங்காகுறிச்சி, வையம்பட்டி, துவரங்குறிச்சி, வளநாடு ஆகிய பகுதிகளிலும் சிறப்புத் தொழுகையும், கூட்டு பிராத்தனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT