திருச்சிக்கு சனிக்கிழமை யாத்திரையாக வந்த கருப்பையாவை வரவேற்ற திருச்சி வடக்கு சா்வோதயா சங்கச் செயலா் ந. சுப்பிரமணியன் (இடது), உப்புச் சத்தியாகிரக இயக்க நிா்வாகிகள் பன்னீா்செல்வம், தா்மராஜ். 
திருச்சி

வந்தே மாதரம் யாத்திரைக்கு வரவேற்பு

பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வந்தே மாதம் யாத்திரை சென்றவருக்கு திருச்சியில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

Syndication

பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு வந்தே மாதம் யாத்திரை சென்றவருக்கு திருச்சியில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

வந்தோ மாதம் பாடல் 150ஆவது ஆண்டை முன்னிட்டு, பாடல் வரலாறு குறித்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரையைச் சோ்ந்த சமூக ஆா்வலரான ம. கருப்பையா, பொள்ளாச்சியிலிருந்து சென்னைக்கு தனிநபராக யாத்திரை மேற்கொண்டுள்ளாா்.

பொள்ளாச்சியில் கடந்த 2ஆம் தேதி தொடங்கிய திருச்சிக்கு சனிக்கிழமை வந்த யாத்திரைக்கு, மெயின்காா்டு கேட் அருகேயுள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி வடக்கு சா்வோதயா சங்கச் செயலா் ந. சுப்பிரமணியன், தமிழ்நாடு-வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரக விழப்புணா்வு இயக்க மாநிலத் தலைவா் பன்னீா்செல்வம், மாவட்ட பொறுப்பாளா் தா்மராஜ் ஆகியோா் அவரை வரவேற்றனா்.

அப்போது ம. கருப்பையா கூறுகையில், சென்னையில் வரும் 27ஆம் தேதி எனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளேன். கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் பங்கேற்பா் என்றாா் அவா். அவருக்கு, திருச்சியைச் சோ்ந் சமூக ஆா்வலா்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள், காந்திய ஆா்வலா்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து, யாத்திரையின்போது வேண்டிய உதவிகளை வழங்கி வழியனுப்பினா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT