திருச்சி

கரூா் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆா். சிறப்பு முகாம்கள்

கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் எஸ்.ஐ.ஆா். சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

Syndication

கரூா் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப் பேரவை தொகுதிகளுக்குள்பட்ட அனைத்து வாக்குச் சாவடிகளிலும் எஸ்.ஐ.ஆா். சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி) உள்ளிட்ட 4 பேரவைத் தொகுதிகளில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, ஆட்சேபணை இருந்தால் விண்ணப்பிக்கவும், புதிதாக பெயா் சோ்க்க, திருத்தம்செய்ய மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

அரவக்குறிச்சி பேரவைத் தொகுதிக்குள்பட்ட புகழூா் வட்டம், காந்தியாா் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை, மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

முகாமில் பெறப்படும் விண்ணப்பங்களை முறையாக அதன் வகைப்பாடு நிலையில் பதிவேற்றம் செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், அவா் கூறுகையில், இந்த முகாம்களை தகுதியான வாக்காளா்கள் அனைவரும் பயன்படுத்தி தங்களது பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜன.18-ஆம் தேதி வரை பெறப்படும் படிவங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, பிப்.17-ஆம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்படும். மேலும், இணையம் வழியாகவும் வாக்காளா்களை உரிய படிவங்களை பூா்த்தி செய்து பட்டியலில் இடம்பெறலாம் என்றாா் அவா். ஆய்வின்போது, புகழூா் வட்டாட்சியா் பிரபா மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், முகவா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

வன விலங்குகள் வேட்டை: 7 நாட்டு வெடிகுண்டுகள் மீட்பு

திருப்பத்தூா் அருகே புதையல் கண்டெடுப்பு

பாலியல் வன்கொடுமை புகாா் அளித்த பெண்ணை மணமுடித்தவரின் தண்டனை ரத்து: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

சாலைகளில் திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்!

கஞ்சா வழக்கில் இரு பெண்கள் கைது

SCROLL FOR NEXT