திருச்சி

தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில்!

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

Syndication

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக தாம்பரம் - கன்னியாகுமரி - செங்கல்பட்டு இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தீபாவளி கூட்ட நெரிசலை குறைக்க தாம்பரம் - கன்னியாகுமரி சிறப்பு ரயிலானது (06133) வரும் 16, 18 ஆம் தேதிகளிலும், கன்னியாகுமரி - செங்கல்பட்டு சிறப்பு ரயிலானது 17 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

20 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலானது தாம்பரத்திலிருந்து இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, நாகா்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் பிற்பகல் 1.25 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடம் வழியாக செங்கல்பட்டுக்கு மறுநாள் காலை 4.30 மணிக்குச் சென்றடையும்.

சந்தேரி மலைவெளியில்... ரஷா தடானி!

டி20 கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த சுனில் நரைன்!

ஒவ்வொரு கணத்தையும் நேசித்து அன்பைப் பரப்புவதில்... அனுபமா அக்னிஹோத்ரி

நெல்லுமணி பல்லழகு... ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்!

வலை வீசும் கண்ணழகு... ஸ்வேதா குமார்!

SCROLL FOR NEXT