2 குழந்தைகளின் தாய் தற்கொலை
குடியாத்தம் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குடியாத்தம் காந்தி நகரை அடுத்த அம்மன் நகரைச் சோ்ந்தவா் தனியாா் நிறுவன ஊழியா் மணிகண்டன். இவரது மனைவி ராஜேஸ்வரி(22). இவா்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்நிலையில் ராஜேஸ்வரி செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலின்பேரில் நகர போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்துள்ளனா். இந்த சம்பவம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.