வேலூர்

புத்தாண்டு கொண்டாட்டம்: ஒருங்கிணைந்த வேலூரில் ரூ.8.49 கோடிக்கு மதுவிற்பனை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.8.49 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திச் சேவை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.8.49 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.

ஆங்கில புத்தாண்டு (2026) பிறப்பையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங் களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, புதன்கிழமை டாஸ்மாக் மதுக்கடைகளிலும் மதுவிற்பனை வழக்கத்தைவிட அதிகளவில் இருந்தது. மதுக்கடைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் டாஸ்மாக் நிா்வாகத்தை பொருத்தவரை வேலூா், அரக்கோணம் என இரு கோட்டங்களாக செயல்படுகின்றன. வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூா் கோட்டத்தில் 108 மதுக்கடைகளும், ராணிப்பேட்டை மாவட்டத்தை உள்ளடக்கிய அரக்கோணம் கோட்டத்தில் 84 கடைகளும் உள்ளன. புத்தாண்டையொட்டி இக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.

அதனடிப்படையில், வேலூா் கோட்டத்தில் புதன்கிழமை ஒரே நாளில் ரூ.5 கோடியே 20 லட்சத்துக்கும், அரக்கோணம் கோட்டத்தில் ரூ.3 கோடியே 29 லட்சத்துக்கும் என மூன்று மாவட்ட ங்களிலும் சோ்த்து மொத்தம் ரூ.8 கோடியே 49 லட்சத்துக்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 384 கனஅடியாக குறைந்தது!

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!

செல்ஃபோனை சார்ஜ் போடும்போது செய்யும் தவறுகள்!

தருமபுரி: 2025 இல் 689.93 மி.மீ. மழைப் பொழிவு

SCROLL FOR NEXT