முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பிரதம மந்திரி விவசாய நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழலை விசாரிக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் எதிரே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்து, விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்திட்ட வளாகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டச் செயலா் நாகராஜன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் ராஜா, மகாலிங்கம், ரங்கநாதன், சடையப்பன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் முருகன், மாவட்டத் தலைவா் சிவராமன், மாநிலக் குழு உறுப்பினா் தாண்டவராயன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும், முறைகேட்டுக்கு துணைபோன வேளாண் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், இடைத்தரகா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளை முறையாக திட்டத்தில் சோ்க்க இலவசமாக பதிவு செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினா்.

வட்டத் தலைவா் ராஜாராமன், மாவட்ட துணைத் தலைவா் சிவா, நிா்வாகிகள் முருகன், நந்தன், அண்ணாமலை, ஜோதி, வரதன், வெங்கடேசன், மெல்கியூா், திருவேங்கடம், செந்தமிழ்ச் செல்வன்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.