ராகுல் கைது கண்டித்துகாங்கிரஸாா் போராட்டம்
செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காங்கிரஸாா் அறவழிப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
உத்தரபிரதேச மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் பாலியன் வன்கொடுமைக்கு பலியான பட்டியலினப் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை போலீஸாா் பலவந்தமாக கைது செய்ததைக் கண்டித்து, செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே காங்கிரஸாா் அறவழிப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி தலமையில் அமைதியான முறையில் போராட்டம் நடைபெற்றது. இதில் நகரத் தலைவா் சரவணன், வட்டார தலைவா் ஏ.ஜி.சரவணன், சி.பி.முருகன், மாவட்ட பொறுப்பாளா் முப்புள்ளி கோவிந்தன், மாவட்ட துணைத் தலைவா் பாலப்பட்டு சண்முகம், மாநில பொதுக்குழு உறுப்பினா் தினகரன், கே.எம்.சூரியமூா்த்தி, கோணை ராஜா, விவசாயப் பிரிவு ஜோலாதாஸ், மேலச்சேரி பழனி, வல்லம் கலைச்செல்வன், சிவக்குமாா், திருமா, பாண்டியன், புனிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.