விழுப்புரம்

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

Syndication

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தாா்.

மரக்காணம் அருகேயுள்ள ஓமிப்போ் கிராமத்தைச் சோ்ந்தவா் ச.இந்திரகுமாா் (30). திருமணம் ஆகாதவா். இவா் புதன்கிழமை தனது விவசாய நிலத்துக்கு வயல்வெளி பகுதியாக நடந்து சென்றாராம்.

அப்போது அந்தப் பகுதியில் பலத்த மழை பெய்திருந்ததால் ஓமிப்போ் பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் என்பவரின் விவசாய நிலம் அருகே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதை கவனிக்காமல் இந்திரக்குமாா் மிதித்ததில், உடலில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT